Tuesday, November 10, 2009

நவ. 26-ல் மாவீரர் தின உரையாற்றப் போவது யார்?


மாவீரர் தினமான நவ. 26-ம் தேதி விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி மாவீரர் தின உரையாற்றுவது வழக்கம். அவர் தமிழீவத்துக்கான அடுத்த கட்ட போராட்டம் குறித்த தகவல்களையும் வெளியிடுவார். ஆனால் தற்போது அவர் உயிருடன் உள்ளாரா? இறந்து விட்டாரா? என்பதே சந்தேகத்துக்கு இடமாக உள்ளது. அவர் இறந்து விட்டதாகவும், இறந்தது பிரபாகரன்தான் என்பதை மரபனு சோதனை மூலம் உறுதி செய்து விட்டதாகவும் இலங்கை அரசு கூறி வருகிறது.
ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் இறந்தது தொடர்பாக இறப்புச் சான்றிதழ் இந்திய அரசு கேட்டிருந்தது. ஆனால் அந்த இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு இன்னும் வழங்காமல் உள்ளது. இதனால் பிரபாகரன் இறந்ததை இலங்கை ராணுவத்தால் இன்னும் உறிதி படுத்த முடியவில்லையோ என்ற சந்தேகம் பரவலாக பலர் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த இறப்புச் சான்றிதழ் வழங்காத விவகாரம், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறி வரும் தமிழக தலைவர்கள் பழ.நெடுமாறன், வைகோ, ராமதாஸ் ஆகியோரின் கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

இந் நிலையில் வரும் நவ. 26-ம் தேதி மாவீரர் தினம் வருகிறது. அன்றைய தினத்தி எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ ஆதரவாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் மாவீரர் தின உரை நிகழ்த்தப்போவது யார்?. இதுதான் இப்போது பொதுமக்கள் மத்தியில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. பிரபாகரன் உயிரோடு இருந்தால் அவர் மாவீரர் தின உரை நிகழ்த்தி தமிழீழ மக்களுக்கு தங்கள் கருத்தை தெரிவிப்பார் என்கின்றனர் பொதுமக்கள். விடுதலை புலிகள் அதரவாளர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உறுதியாக சொல்கின்றனர்